வேலை செய்த சம்பளத்தை கேட்டதால் தகராறு; 2 பேர் கைது

வேலை செய்த சம்பளத்தை கேட்டதால் ஏற்பட்ட தகராறு காணரகமாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-30 17:26 GMT

செந்துறை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். அதே ஊரைச் சேர்ந்த ராஜா, தியாகராஜனிடம் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தியாகராஜன், ராஜாவுக்கு தரவேண்டிய ரூ.3,000 சம்பளத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ராஜா, தியாகராஜனின் உபகரணங்களை கைப்பற்றி வைத்துள்ளார்‌. இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன் ராஜாவின் வீட்டிற்கு சென்று தனது உபகரணங்களை கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இந்த மோதலில் தியாகராஜன் காயமடைந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த தியாகராஜன் தம்பி ராமசாமி, ராஜா வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ராஜா வீட்டில் இல்லாத நிலையில் ராஜாவின் பாட்டி சாவித்திரி மற்றும் அவரது தாயார் ராதிகா ஆகியோரை தாக்கியதாக தெரிகிறது. இந்த மோதலில் இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் ராஜாவின் தாயார் ராதிகாவையும், சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில் ராமசாமியையும் இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்