கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்சினை

கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.

Update: 2022-11-21 20:21 GMT

சிறுகனூர் அருகே குமுளூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஊரில் வசிக்கும் 2 சமுதாயத்தினரும் ஒற்றுமையாக திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கோர்ட்டு தடை உத்தரவு உள்ளதாக கூறி, ஒரு தரப்பினர் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் மற்றும் வருவாய் துறையினர், சிறுகனூர் போலீசார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கூறி, மற்றொரு தரப்பினர் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப் முன் அமர்ந்து வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் நேற்று அக்னி சட்டி எடுத்தல், தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், கோர்ட்டு தடை உத்தரவை மற்றொரு தரப்பினரிடம் அதிகாரிகள் காண்பித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அந்த தரப்பினர் திருவிழாவை தொடர்ந்து நடத்தாமல் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்