இரு குடும்பத்தினர் இடையே தகராறு; 8 பேர் மீது வழக்கு

இரு குடும்பத்தினர் இடையே தகராறு; 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-03 18:50 GMT

குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் ஊராளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி போதும்பொண்ணு (வயது 29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மனைவி மோனிஷா (25) என்பவரின் குடும்பத்திற்கும் பைப்லைன் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் இரு குடும்பத்தாருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இந்த தகராறு குறித்து போதும் பொண்ணு அளித்த புகாரின் பேரில் மோனிஷா, மோகன், முருகேசன், தமிழரசி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுபோல மோனிஷா அளித்த புகாரின் பேரில் போதும்பொண்ணு, மணிகண்டன், கனகராஜ், சுப்பிரமணி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்