இருதரப்பினரிடையே தகராறு; 8 பேர் மீது வழக்கு
இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே சித்தால் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தராமன் (வயது 41). இவர் தனது வீட்டுமனைக்கு பின்னால் உள்ள புறம்போக்கு இடத்தில் தகர கொட்டகை அமைத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயந்தராமனுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் கொட்டகை சேதமடைந்தது. இதுகுறித்து ஜெயந்தராமன் அளித்த புகாரின் பேரில் திருமுருகன், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் இளவரசன், தமிழரசன், சக்தி மற்றும் உறவினர்கள் ஆறுமுகம், வெங்கடேசன் ஆகிய 7 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயந்தராமன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.