கோவில் விழாவில் தகராறு; வாலிபர் கைது

திசையன்விளை அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-12 19:50 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடி வடக்கு தெருவை சேர்நதவர் செல்வராஜ். இவருடைய மகன் குணால் (வயது 22). இவர் அங்கு நடைபெற்ற கட்டேறும் பெருமாள் கோவில் கொடை விழாவில் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ், ஆகாஷ் ஆகியோரிடம் தகராறு செய்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்குப்பதிவு செய்து குணாலை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்