கோவில் விழாவில் தகராறு; 7 பேர் மீது வழக்கு

களக்காடு அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-09-01 20:14 GMT

களக்காடு:

களக்காடு அருகே கீழதேவநல்லூரைச் சேர்ந்தவர்கள் அழகியநம்பி, கோபி. சம்பவத்தன்று இவர்கள் அங்குள்ள கோவில் கொடை விழாவில் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கோவில் தர்மகர்த்தா முருகன், அவருடைய மனைவி சீதாலெட்சுமி ஆகியோர் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அழகியநம்பி, கோபி ஆகியோர் முருகனையும், சீதாலட்சுமியையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை சங்கர சுப்பிரமணியன் மகன் ரமேஷ்ராம் (27) தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அழகியநம்பி, கோபி, சந்தனசெல்வம், சுடலைமுத்து, நம்பிராஜன், மாயாண்டி, சூர்யா ஆகிய 7 பேரும் சேர்ந்து ரமேஷ்ராம், மகாலிங்கம், முத்துபாண்டி, முருகன் ஆகிய 4 பேரையும் கம்பியால் சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அழகியநம்பி உள்ளிட்ட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்