அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகராறு; 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-11 18:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே குன்னூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களான ராஜீவ் காந்தி மற்றும் முத்துக்குமரன் ஆகியோருடன் சேர்ந்து அங்கிருந்த செவிலியர்களிடம் மருத்துவர் எங்கே எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். மேலும் செவிலியர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தி, முத்துக்குமரனை கைது செய்தனர். மேலும் சுரேசை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்