பட்டாசு கடையில் தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு

பட்டாசு கடையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-27 18:32 GMT

தோகைமலை அருகே உள்ள வெள்ளப்பட்டி களத்து வீடு பகுதியில் தோகைமலை செட்டி தெருவை சேர்ந்த ராஜகோபால் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கரையாம்பட்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ், வெள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அஜித் ஆகிய 2 பேரும் பட்டாசு வாங்கி விட்டு ரூ.100 குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் பேசியும் அவர்கள் எதையும் கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து தோகைமலை போலீசார் இருதரப்பினரையும் சேர்ந்த ராஜகோபால், மூர்த்தி, ஆகாஷ், அஜித் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்