3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்து வைப்பு - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பெருமிதம்
மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் , "கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் தற்போது வரை 6,300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த வக்கீல்கள், வக்கீல்கள் சங்கங்கள், அரசு வக்கீல்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள்" என தெரிவித்தனர்
கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் ஆகியோர் முதல் அமர்வில் இருந்து பொதுநல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர். நேற்று காலையில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக அந்த நீதிபதிகள், "கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் தற்போது வரை 6,300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம். இதற்கு உறுதுணையாக இருந்த வக்கீல்கள், வக்கீல்கள் சங்கங்கள், அரசு வக்கீல்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள்" என தெரிவித்தனர். பின்னர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் செயல்பாடு பாராட்டுக்குரியது எனவும் குறிப்பிட்டனர்.