புகார் மீது நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

தொழிலாளி விஷம் குடித்த விவகாரத்தில், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

Update: 2022-06-28 15:29 GMT

கோவை

தொழிலாளி விஷம் குடித்த விவகாரத்தில், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விஷம் குடித்தார்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறை தீர்க் கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது வாயில் நுரை தள்ளியபடி வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப் போது அவர் எனது புகார் மனு மீது சிங்காநல்லூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் விஷம் குடித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். உடனே அவரை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விசாரணையில் அவர் இருகூர் அருகே ஏ.ஜி.புதூரை சேர்ந்த மில் தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (வயது 35) என்பதும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் ஏற்பட்ட தகராறு குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தால் விஷம் குடித்து விட்டு கலெக்டர் அலுவலகம் வந்தது தெரிய வந்தது.

பணியிடை நீக்கம்

இந்த சம்பவம் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த கோவை தெற்கு துணை கமிஷனருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், மில் தொழிலாளியின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காதது தெரிய வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து துணை கமிஷனர் சிலம்பரசன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்