போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் புறக்காவல் நிலையத்தில் பணி நேரத்தில் இல்லாத போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

Update: 2022-06-23 13:28 GMT

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் புறக்காவல் நிலையத்தில் பணி நேரத்தில் இல்லாத போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புறக்காவல் நிலையம்

கோவை- திருச்சி ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சைக் காக வந்து செல்கின்றனர். இதனால் அங்கு நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிமாக இருக்கும்.

இந்த கோவை அரசு ஆஸ்பத்திரியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக் கவும், விபத்து உள்ளிட்டவற்றில் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையிலும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் சார்பில் புறக்காவல் நிலையம் இயங்கி வருகிறது.

விசாரணை

இந்த புறக்காவல் நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோயாளிகளின் உறவினர்கள் சிலர் வந்தனர்.

அங்கு போலீசார் யாரும் பணியில் இல்லை. இது குறித்து அவர்கள் கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.

அவர், இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோவை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மாதவனை அறிவு றுத்தினார். அதன்பேரில் அவர், விசாரணை நடத்தினார்.

பணியிடை நீக்கம்

இதில் சம்பவத்தன்று அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத் தில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய ஏட்டு ஏழுமலைக்கு பணி வழங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஆனால் அன்று அவர் பணியில் இல்லாமல் வெளியே சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து புறக்காவல் நிலையத்தில் பணியில் இல்லாத போலீஸ் ஏட்டு ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்து துணை கமிஷனர் மாதவன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்