மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்ட மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்ட மனு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-05-08 20:38 GMT


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்த பூமங்கலப்பட்டியைச் சேர்ந்த செல்லம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் பூமங்கலப்பட்டியில் வருகிற 26-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வடமாடு மஞ்சு விரட்டு நடத்த முடிவு செய்து உள்ளோம். எனவே இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கொட்டாம்பட்டி போலீசில் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் இதுதொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதித்து, உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கப்பட்ட கிராமங்கள் தொடர்பான அரசாணையில் பூமங்கலப்பட்டி கிராமத்தின் பெயர் இடம்பெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்