ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பர்லியார் ஊராட்சியில் கடந்த 26-ந் தேதி வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை பார்வையிட்டார். அப்போது பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாதது தெரியவந்தது.
அதை முறையாக பராமரிக்க கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஊராட்சி செயலாளர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து, கலெக்டர் அம்ரித் நடவடிக்கை எடுத்தார்.