சுகாதார அதிகாரி பணியிடை நீக்கம்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-04-21 17:09 GMT

வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 58). இவர் அணைக்கட்டு வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். தனியார் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும் இவர் மேற்கொண்டு வந்துள்ளார். இந்தநிலையில் வேலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகள் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற அனுமதி வழங்க கிருஷ்ணமூர்த்தி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இந்த பணத்தை அவர் பெற்றபோது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று வேலூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்