தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம்
தூய்மை பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடங்களை மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக நிர்வகித்து, அதை பயன்படுத்தும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து வருகிறது.
ஆனால் அங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இதுகுறித்து ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தி, தூய்மை பணியாளர் மாரிமுத்து என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.