கிடேரி கன்றுகளுக்கு நோய் தடுப்பூசி
கிடேரி கன்றுகளுக்கு நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்படும். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி தொடங்கப்பட்ட இத்தடுப்பூசி திட்டத்தின் 2-வது தவணை அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்தி கொண்டால் அந்த கிடேரி கன்றுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக்கூடாது, என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.