விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்

விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது

Update: 2023-08-06 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து மாவட்ட வேளாண் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர் குமரன், மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம் ஆற்றிய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளை எடுத்துரைத்தார். மேலும் குறிப்பிடத்தக்க பணிகளான செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தின் மூலமாக 152 வருவாய் கிராம விவசாயிகளுக்கு வர வேண்டிய 124 கோடி ரூபாய் பயிர்க்காப்பீடு தொகை பெற்றுத்தந்தது, உப்பு நீருக்கான 'நியோடைனியம்' காந்தக்கருவிகளை பயன்படுத்தி உப்பு நீரால் பாழ்பட்ட நிலங்களை விளைநிலங்களாக மாற்றியது உள்ளிட்ட சாதனைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுதலின்படி வெற்றியடைந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளை சந்தித்து கலெக்டர் பேசினார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்