கலந்துரையாடல்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75-வது ஆண்டு அமுதப்பெருவிழாவையொட்டி கலந்துரையாடல் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75-வது ஆண்டு அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தினையொட்டி பிரதமர் மோடி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.