வீரட்டானேஸ்வரர் கோவில் அருகில் ஜீவ சமாதி கண்டுபிடிப்பு
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அருகில் ஜீவ சமாதி கண்டுபிடிப்பு
பண்ருட்டி
பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் முன்னாள் பிரதமர் நேருவுக்கு செங்கோல் கொடுத்த சடைசாமி என்கிற குமாரசாமி தம்பிரான் சுவாமியின் ஜீவசமாதி உள்ளது.
இங்கு முன் மண்டபம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றபோது அங்கு மேலும் ஒரு ஜீவசமாதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த கல்வெட்டு கோவில் அருகில் எங்கேனும் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.