தோட்டத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

கயத்தாறு அருகே தோட்டத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2022-07-06 15:47 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே தோட்டத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

தோட்டத்தில் குழி தோண்டியபோது...

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் பஞ்சாயத்து சத்திரப்பட்டி கிராமத்தை சோ்ந்தவர் ராஜபாண்டி. இவரது தோட்டத்தில் நேற்று பூஞ்செடிகள் வைப்பதற்காக விவசாய தொழிலாளர்கள் குழி தோண்டினர்.

அப்போது, அங்கு ஐம்பொன்னாலான 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. அவை கிருஷ்ணர்- ஆண்டாள் சிலைகள் போன்று இருந்தது. மேலும் அங்கு பழங்காலத்தில் கோவில்களில் பயன்படுத்தப்படும் உருளி, வாட்டம், சிட்டு உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த எடை 21 கிலோ 680 கிராம் ஆகும்.

தாலுகா அலுவலகத்தில் ஒப்படைப்பு

இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், வருவாய் துறையினர் விரைந்து சென்று, ஐம்பொன் சிலைகளையும், பழங்கால பொருட்களையும் பார்வையிட்டனர். பின்னர் அவற்றை கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், ''ஐம்பொன் சிலைகள், பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்'' என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்