கீழடி அகழாய்வில் உயர் ரக சிவப்பு கல் மணிகள் கண்டெடுப்பு.!

கீழடி அகழாய்வில் கார்னிலியன் கல் வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-24 15:03 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளின் மூலம் 8 கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கீழடி அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கீழடி, அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு மும்முரமாக நடந்து வருகிறது. இந்த முறையும் ஏராளமான பொருட்கள், அகழாய்வு குழிகளை தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 9-ம் கட்ட அகழாய்வின் போது கார்னிலியன் கல் வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. முதுமக்கள் தாழிக்குள் இந்த அரிய வகையிலான இரண்டு சிவப்பு மணிகள் கண்டறியப்பட்டு உள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மணியானது அலை, அலையான வரி வடிவத்துடன் வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது. இந்த மணியின் நீளம் 1.4 செ.மீ., மற்றும் அதன் விட்டம் 2 செ.மீ. ஆக உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்