அன்னதான கூடம் கட்டும் பணியின்போது தட்சிணாமூர்த்தி சிலை கண்டெடுப்பு
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் அன்னதான கூடம் கட்டும் பணியின்போது தட்சிணாமூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்க பந்தீஸ்வரர் கோவிலில் தினசரி அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் அருகே தனியாக ஒரு அன்னதான கூடம் கட்டுவதற்காக கடக்கால் தோண்டும் பணி நடந்தது. அப்போது ஒரு சாமி சிலை பள்ளத்தில் இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அதை எடுத்து சுத்தம் செய்து பார்த்தபோது சுமார் 4 அடி உயரமுள்ள தட்சிணாமூர்த்தி சிலை என தெரியவந்தது. இந்த சிலை கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் சங்கர், தட்சணாமூர்த்தி சிலையை பாதுகாப்பாக வைத்தர். சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அந்தப் பகுதியில் பரவியதால் பக்தர்கள் சென்று சிலையை பார்த்து வணங்கி வருகின்றனர்.