பழமை வாய்ந்த நெடுங்கல் கண்டெடுப்பு

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த நெடுங்கல் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-05-28 20:17 GMT

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த நெடுங்கல் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

தொல்லியல் எச்சங்கள்

உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பழங்கால தொல்லியல் எச்சங்கள் அவ்வப்போது கிடைத்த வண்ணம் இருக்கின்றன.இதன் ஒரு பகுதியாக வட தமிழக பகுதிகளில் கிடைத்து வந்த நெடுங்கற்கள் உசிலம்பட்டி பகுதிகளிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

தொட்டப்பநாயக்கணூர், பசுக்காரன்பட்டி, திருமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டு முறை இல்லாத சிதிலமடைந்த கோவில்களில் மட்டுமே நெடுங்கல் கிடைத்து வந்தது.

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெத்தனசாமி கோவில் உள்ளது.இந்த கோவில் வளாகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நெடுங்கல் இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினரால் கண்டறிந்தனர்.

நெடுங்கல்

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறும் போது:-

10 அடி உயரம் மேல் பகுதியிலும் 7 அடி தரை பகுதியிலும் என சுமார் 17 அடி உயரம் கொண்ட இந்த நெடுங்கல் இப் பகுதியில் வாழ்ந்த இனக்குழு தலைவனுக்கு எழுப்பப்பட்டு இருக்கலாம் எனவும், இந்த கல்லை இன்றும் பழமை மாறாமல் பெத்தனசாமி கோவிலில் பாதுகாத்து வழிபாடு செய்து வருவது தனிச்சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் உசிலம்பட்டி பகுதியில் இது போன்ற நெடுங்கற்கள் சிதிலமடைந்த நிலையில் ஆங்காங்கே காணப்படும் நிலையில் பழங்கால தொல்லியல் எச்சங்களும் அதிகமாக கிடைப்பதால் இப்பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் செழிப்பாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றாக உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்