பழமையான பெருமாள் சிலை கண்டெடுப்பு

வேலூர் அருகே பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-09-04 13:43 GMT

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் ஜெகஜீவன்ராம் தெருவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு பழமையான சிலை ஒன்று புதைந்திருந்தது தெரியவந்தது. அதை வெளியே எடுத்தனர். அந்த சிலை நின்ற நிலையில் உள்ள பெருமாள் சிலை என்பதும், அவை சேதமாகி இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் தாசில்தார் செந்திலுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு தாசில்தார் செந்தில் சென்று சிலையை பார்வையிட்டார். பின்னர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகம் கொண்டு சென்றார். அந்த சிலையை கருவூலத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்