பழங்கால நந்தி சிலை கண்டுபிடிப்பு

கொடைரோடு அருகே பழங்கால நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-02-21 19:00 GMT

கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூரில் கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் சிவனும், பெருமாளும் ஒரே கருவறையில் எழுந்தருளி அருள்பாலிப்பது சிறப்பு ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று கோவிலில் சுற்றுச்சுவர் பகுதியில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது பைரவர் சன்னதி அருகே பள்ளம் தோண்டியபோது ஒருபாறை கல்லில் நந்தி சிலை ஒன்று தென்பட்டது. இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்து நந்தி சிலையை பார்வையிட்டனர். இந்த சிலை 12-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த சிலை கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்