மகாதேவர் கோவிலில் 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்ப
ஆற்றூர் மகாதேவர் கோவிலில் 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
திருவட்டார்,
ஆற்றூர் அருகே உள்ள கல்லுப்பாலத்தில் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளபெருக்கில் இந்த கோவில் சேதமடைந்தது. அதன்பின்பு 2012-ம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று தஞ்சாவூர் தொல்லியல் கழக ஆய்வாளர்கள் செந்தீ நடராஜன், நாகராஜன், அய்யப்பதாஸ் ஆகியோர் அடங்கிய தொல்லியல் ஆய்வாளர்கள் குழு கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூலவர் சன்னயின் முன்பு 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் வேணாட்டு அரசர்களின் காலகட்டத்தில் 1395-ம் ஆண்டு மேஷமாதம் 28-ந்் தேதி மணி, நாராயணன், ராமன் ஆகியோர்களால் இந்த கோவில் கட்டபட்டதாக எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த கோவில் 627 ஆண்டு பழமையானது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராஜன் கூறும்போது, 'வேணாட்டு அரசர்களின் காலகட்டத்தில் இந்த கோவில் வட்டவடிவில் கற்களால் கட்டபட்டது கல்வெட்டு மூலம் தெரிவந்துள்ளது. கோவிலில் நந்திமண்டபம் உட்பட பல்வேறு பகுதிகளில் கல்வெட்டுகள் இருந்துள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்யும் போது மணலால் கற்களை சுத்தம் செய்த போது பல கல்வெட்டுகள் அடையாளம் தெரியாமல் அழிந்துள்ளன. மிஞ்சியிருக்கும் கல்வெட்டுகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.