நகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருச்செங்கோடு நகராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாதகடை வாடகை ஆகியவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது. இந்தநிலையில் வாி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வரிசெலுத்தாத தொழில்கூடங்கள், தொழில் உரிமம் ரத்து செய்வதுடன் அவர்களின் மின்இணைப்பு துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துறை செய்யப்படும் எனவும் ஆணையாளர் கணேசன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மலைஅடிவார பகுதியில் குடிநீர் கட்டணம் கட்டாத இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.