வரி பாக்கி செலுத்தாத 16 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

நெல்லை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாத 16 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2023-01-24 21:22 GMT

நெல்லை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி பாக்கி வைத்திருப்போர் வீடு மற்றும் கட்டிடங்களில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. பேட்டை பகுதியில் 3 ஆண்டுகளாக வரி பாக்கி வைத்திருந்த 9 வீடுகளில் நேற்று முன்தினம் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மண்டலம் 27-வது வார்டு கல்லணை தெரு, 17-வது வார்டு சர்தார்புரம், ஆசாத் ரோடு பகுதிகள், பாளையங்கோட்டை மண்டலத்தில் 38-வது வார்டு சீனிவாசநகர், 29-வது வார்டு டி.வி.எஸ்.நகர், தச்சநல்லூர் மண்டலத்தில் 11-வது வார்டு வண்ணார்பேட்டை சாலைத்தெரு, 30-வது வார்டு கைலாசபுரம், மீனாட்சிபுரம் மற்றும் 13-வது வார்டில் புதுஅம்மன் கோவில் தெரு, சங்கரன்கோவில் ரோடு, மேலப்பாளையம் மண்டலத்தில் 42-வது வார்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மொத்தம் 16 வீடுகளில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். எனவே நெல்லை மாநகரில் வணிக வளாகம், திருமண மண்டபம் மற்றும் வீடுகளுக்கு உரிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நிலுவைத்தொகையை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்