வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்து வரி வசூல்

வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்து வரி வசூல் செய்தனர்.

Update: 2023-02-13 19:39 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில் பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை 5 கோடி ரூபாய் வரி வசூல் பாக்கியுள்ள நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர். இந்நிலையில் கீழக்குடியிருப்பு பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உடனடியாக வரி செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்புகளை துண்டித்து, வரி வசூல் செய்து வருகின்றனர். இது பற்றி நகராட்சி ஆணையர் கூறுகையில் வரிகள் செலுத்த தவறுேவார் மீது ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்