ஆயுதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஆயுதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-09-21 19:31 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் நெல்லை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி நேற்று நடைபெற்றது. மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் சென்னையில் இருந்து பயிற்சி அளிப்பதற்காக பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாநகர போலீசாருக்கு கடந்த 2 நாட்களாக எழுத்துத்தேர்வு பயிற்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கிய வர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது படகில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் போலீசாருக்கு எடுத்துரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்