பேரிடர் கால மீட்பு ஒத்திகை

கந்திலி அருகே பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடந்தது.

Update: 2022-09-01 17:58 GMT

கந்திலி ஒன்றியம் ஆதியூர் ராவுத்தம்பட்டி ஏரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ‌நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க இயக்குனர் வழக்கறிஞர் மாது வரவேற்றார்.

மழைவெள்ளம் போன்ற பேரிடர்களில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சையளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்தையன், திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், தாசில்தார் சிவப்பிரகாசம், தீயணைப்பு துறை அலுவலர்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையாளர் பானு, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி, ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் தீபா, சுகாதாரத்துறை சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்