நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை தீவிரமடையும் போது மண் சரிவு, மரங்கள் மற்றும் பாறை விழுவது, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் குன்னூரில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை சார்பில், பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது. மண் சரிவு, நிலச்சரிவில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செயல்விளக்கம் அளித்தனர். மேலும் வடகிழக்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.