கன்னியாகுமரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை; உண்மை என நினைத்து மக்கள் திரண்டதால் பரபரப்பு
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பேரிடர் மேலாண்மை குழுவினர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி,
பருவமழை காலங்களில் வெள்ளம் பாதித்த இடங்கள் மற்றும் அவசரகால சூழல்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து தீயணைப்புத்துறையினர், மீட்புப்படையினர் ஆகியோருக்கு ஒத்திகை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வள்ளியாற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பேரிடர் மேலாண்மை குழுவினர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதை உண்மை என்று நினைத்து மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களிடம் ஒத்திகை பயிற்சி குறித்து விளக்கமளித்து பொதுமக்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.