அரசு பள்ளியில் பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி

வெள்ளிமலை அரசு பள்ளியில் பேரிடர் மீட்பு செயல்விளக்க பயிற்சி நடந்தது.

Update: 2022-06-27 18:34 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்த செயல்விளக்க விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதில் தேசிய பேரிடர் துணை சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையில் பேரிடர் மீட்பு குழுவினர் கலந்து கொண்டு மழை வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் முதல் உதவி சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறி மாணவர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கல்வராயன்மலை தாசில்தார் அசோக், துணை தாசில்தார் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் தனபால், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்



Tags:    

மேலும் செய்திகள்