பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

வாய்மேடு அருகே பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-06-27 14:31 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் மேலாண்மை துறையின் சார்பில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பேரிடர் மாவட்ட பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்