திருப்புகலூர் ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

பேரிடர் மேலாண்மை பயிற்சி

Update: 2022-06-21 16:26 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்