பேரிடர் மேலாண்மை பயிற்சி

கந்திலி அரசு கலைக்கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

Update: 2023-09-22 17:57 GMT

திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை பயிற்சி கந்திலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தீயணைப்பு மாவட்ட அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். அப்போது பேரிடர் காலங்களில் எப்படி தற்காத்து கொள்ளுவது, ஆபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது குறித்து மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். இதில் கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்