மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறையில் மாதந்தோறும் 2-வது வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் தலைமை தாங்குகிறார். இதில் மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை மனுக்களாக அளித்து பயன் பெறலாம். மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல், மற்றும் மருத்துவச்சான்று நகல், ஆதார் அட்டைநகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதல்-அமைச்சரின் மருத்துவகாப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய புகைப்படம்-1, செல்போன் எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.