அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி பலி

3 சக்கர ஸ்கூட்டரில் சென்றபோது, அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-01 16:49 GMT

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள தென்பழனியை சேர்ந்தவர் முத்து (வயது 78). மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் இவர், தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ஸ்கூட்டரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது கோவிலுக்கு அருகிலேயே கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்