ஆனைமலையில் போட்டிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அசத்தல்

ஆனைமலையில் போட்டிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அசத்தல்

Update: 2022-11-26 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒன்றியம், மாற்றுத்திறன் மாணவர்களைப் பற்றிய நட்புணர்வை வளர்க்கும் விதமாக வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிராமிய நடனம், ஒயிலாட்டம், பாடல்கள், மாறுவேடம் போட்டிகள், பறை இசை, மாற்று திறனாளி மாணவர்கள் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை பறைசாற்றும் விதமாக அற்புதமாக சாதித்துகாட்டினர். இதில், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்குமார், வட்டார மேற்பார்வையாளர் பொறுப்பு ஜெயந்தி, ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி, ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்