படப்பையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்
படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 263 மாற்றுத்திறனாளிகள் வேலை செய்வதற்கு பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் குறை தீர் முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும். என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்
அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடத்தப்படும்.
எனவே, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிய பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகள் ஏதுமிருப்பின் மேற்காணும் குறை கேட்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.