ஊனத்தடுப்பு சிறப்பு முகாம்

ஊனத்தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.;

Update: 2022-06-25 18:37 GMT

கரூர் மாவட்ட தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த மாபெரும் வட்டார ஊனத்தடுப்பு சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு திருச்சி மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். விழாவில் பயனாளிகளுக்கு வேட்டி, சேலை, போர்வை, துண்டு, செருப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டி வழங்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவகுமார், தியாகராஜன், சகுந்தலாதேவி, இறைமதி, 75 குணமடைந்த தொழுநோயாளிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்