இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் - கவிஞர் வைரமுத்து
இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள்.
அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார். கலையுலகை ஆண்டு வருவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.