தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.;
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ) மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்க்கை 2 சுற்றுகளாக நடைபெற்றது. அதை தொடர்ந்து காலி இடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு வருகிற 25-ந் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் பேட்டை, அம்பை, ராதாபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள ஐ.டி.ஐ. சேர்க்கை உதவி மையங்களை அணுகியும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.