ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள்- கள அலுவலர்கள் தேர்வு

நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் தேர்வு வருகிற 12-ந்் தேதி நடக்கிறது.;

Update: 2023-10-08 18:45 GMT


நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் தேர்வு வருகிற 12-ந்் தேதி நடக்கிறது.

நேர்காணல்

நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சி.கஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களுக்கான நேர்காணல் தேர்வு, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 12-ந் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்பணிக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படாது. பாலிசியின் பிரீமியத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை

நேரடி முகவர்கள் தேர்வில் கலந்து கொள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 வயது முதல் 50 வயதிற்கு உட்டபட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் ஆகியோருக்கும், நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

கள அலுவலர்கள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதியில் பணியாற்ற வேண்டும். மேலும், ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்