அரியலூர்-ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர நேரடி சேர்க்கை
அரியலூர்-ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.;
அரியலூர், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) 2023-ம் ஆண்டிற்கு சேர நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி/ 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.50 விண்ணப்ப கட்டணம், சேர்க்கை கட்டணம் ஒரு வருடம் தொழிற்பிரிவு பயிற்சிக்கு ரூ.185, இரண்டு வருடம் தொழிற்பிரிவு பயிற்சிக்கு ரூ.195 ஆகும். இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசு ஐ.டி.ஐ.க்களை மின்னஞ்சல்- prlgitiariyalur@gmail.com, செல்போன் எண்-9499055877, தொலைபேசி எண்-04329-228408 (அரியலூர்), மின்னஞ்சல்- prlgitiandimadam@gmail.com, செல்போன் எண்-9499055879 (ஆண்டிமடம்) தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.