திண்டுக்கல்: சிறுமியை காதலிப்பதாக கூறி நகை வாங்கி ஏமாற்றிய இளைஞர் கைது
நகை காணாமல் போனது குறித்து, சிறுமியிடம் அவரது தாய் கேட்டபோது, காதலனிடம் கொடுத்ததாக கூறியுள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே, 12 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, நகை வாங்கி ஏமாற்றிய இளைஞரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வழக்குறைஞர் படிப்பு படித்து வரும் அல்பாசித் என்பவர், சிறுமியை காதலிப்பதாக கூறி, 6 சவரன் தங்க நகைகளை வாங்கி ஏமாற்றி உள்ளார்.
நகை காணாமல் போனது குறித்து, சிறுமியிடம் அவரது தாய் கேட்டபோது, காதலனிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், அல்பாசித்தை போக்சோவில் கைது செய்ததுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.