திண்டுக்கல்: பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவிலில் அண்ணாமலை குடும்பத்துடன் சாமி தரிசனம்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது குடும்பத்தினருடன் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை மலைக்கிராமத்தில் பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று தனது குடும்பத்தினருடன் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். வழிபாடு முடிந்து வெளியே வந்த அண்ணாமலையை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.