'தினத்தந்தி' செய்தி எதிரொலி: வீதியில் நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: வீதியில் நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்
கொடுமுடி
கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார்பாறை வடக்கு வீதியில் தெருவின் நடுப்பகுதியில் மின்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகவும் இடையூறாக இருந்து வந்தது. எனவே மின்கம்பத்தை அகற்றி தெருவின் ஓரத்தில் நட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்ற செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உடனடியாக தெருவின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை தெருவின் ஓரத்தில் நட்டனர். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டு்க்களையும் தெரிவித்துள்ளனர்.