தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-25 19:13 GMT

வீணாகும் குடிநீர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர் பஸ் நிலையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் வெளியேறும் வாசல் அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர், சிவகாசி.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சிவகாசிக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், சாத்தூர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருச்சுழி.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணபதி, அருப்புக்கோட்டை.

தேங்கி கிடக்கும் குப்பை

விருதுநகர் நகர் பகுதிகளில் உள்ள சாலையில் சிலர் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

Tags:    

மேலும் செய்திகள்